search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி"

    கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை செல்ல முடிவு செய்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி கேட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    சீனாவின் கட்டுபாட்டில் உள்ள திபெத்தில் கைலாஷ் மலை உள்ளது. இங்கு மானசரோவர் புனித யாத்திரையை பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்து, புத்தமதம், ஜெயின் மற்றும் திபெத் மதம் ஆகிய 4 மதங்களை சேர்ந்த பக்தர்கள் கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை செல்கிறார்கள். பனி மற்றும் கடினமான பாதை காரணமாக புனித யாத்திரைக்கு குறிப்பிட்ட அளவே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இதற்கான முன்கூட்டியே பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டுக்கான யாத்திரைக்காக கடந்த பிப்ரவரி 20-ந் தேதி முதல் மார்ச் 20-ந்தேதி வரை பெயர்கள் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி கேட்டு உள்ளார். மேலும் கைலாஷ் மலைக்கு ஹெலிகாப்டரில் செல்ல அவர் அனுமதியை எதிர்நோக்கி உள்ளதாக தெரிகிறது.

    ராகுல்காந்தியின் மானசரோவர் யாத்திரைக்கு அனுமதி பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, 70 ஆண்டு ஆட்சியில் காங்கிரஸ் என்ன செய்தது? என ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார். #Jaipur #Amitshah #RahulGandhi
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் பங்கேற்றார். இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது: 

    சமீப காலமாக நடைபெற்ற எட்டு இடைத்தேர்தல்களில் நாங்கள் தோல்வி அடைந்தாலும், அவர்களுக்கு எதிராக இன்னும் 14 மாநிலங்களில் ஆட்சியில் இருந்து வருகிறோம்.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டியது, எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வழங்கியது என பல்வேறு மக்கள் நலப்பணிகள் என பட்டியல் நீளுகிறது. ஆனால், ராகுல் இது போதாது, அது போதாது என்கிறார்.



    நீங்கள் ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள்?  மூன்று தலைமுறைகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் எதுவும் செய்யாததால் தான் எங்களால் மக்களுக்கு கழிப்பறை கட்டிக்கொடுக்க முடிந்தது, ஏழைத் தாய்மார்களுக்கு சிலிண்டர்களை வழங்க முடிந்தது.      

    அவர் விடுமுறைக்கு எங்கு செல்கிறார் என்பதும், எங்கிருந்து வருகிறார் என்பதும் யாருக்கும் தெரியாது என குற்றம் சாட்டினார். #Jaipur #Amitshah #RahulGandhi 
    ×